30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று(14) வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட் சர்விஷஸ் நிறுவனத்திற்கு எதிராக, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ, சுஜானி போகொல்லாகம மற்றும் நித்தியா சேனானி சமரநாயக்க ஆகிய பிரதிவாதிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வௌிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்குமாறு, பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
வௌிநாட்டிற்கு செல்லும் திகதி மற்றும் நாடு திரும்பும் திகதி ஆகியவற்றை குறிப்பிட்டு நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Reported by :Maria.S