நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வங்கி மற்றும் நிதித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இயலுமையை நன்கு அறிந்து அதற்கு அமைவாக செயற்படுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அதனையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நான்கு படிமுறைகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், வாக்கெடுப்பு மாத்திரமே மீதமுள்ள நிலையில், அதனை தடுக்க முடியாதெனவும் அவர் சூளுரைத்தார்.
தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ள நிலையில், மக்களின் அடிப்டை உரிமைகளை பாதுகாப்பதை கடப்பாடாகக் கொண்டுள்ள நீதிமன்றம் தேர்தலை நடத்த வேண்டாம் என தீர்ப்பளிக்காது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
Reported by :Maria.S