நேற்று முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பல நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று (25) இரவு முதல் எரிபொருளைப் பெறுவதற்கு எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் QR முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
———
Reported by :Maria.S