நாட்டின் கடன் திட்டம் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல்களை விரைவில் தொடங்க சர்வதேச நாணய நிதியம்  எதிர்பார்ப்பு

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணய நிதியம் மிக விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிதியம் இன்னமும் இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொழில்நுட்ப தொடர்பில் இருப்பதாகவும் உயர்மட்டக் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் நிதியத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர், ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிப்பின் பின்னர், தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முடியும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
——————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *