மலையக மக்களின் தலையாய பிரச்சினைகளில் ஓன்று குடியிருப்பு பற்றியதாகும். இன்றுவரை அவர்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குடியிருப்புத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. வீடு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருப்பதோடு,தனி மனிதன்,குடும்பம்,சமூகம் ஆகியவற்றின் வாழ்க்கைத் தரத்தினை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே 56 வீதமான தொழிலாளர்கள் தொடர்ந்து வசிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு ஓரளவிற்கு முன்னேறி உள்ளது, எனினும்,இம்முன்னேற்றத்தின் வேகம் குறைவாகவே கா-ணப்படுகின்றது. இதற்கான பிரதான காரணி தேசிய வீடமைப்பு திட்டத்தோடு இது இணைக்கப்படாமல் இருப்பதாகும். பிறதுறைகளில் போன்றே இதிலும் மலையக மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
வீடமைப்பானது நிலத்தோடும்,வருவாயோடும் தொடர்புபட்டதாகும். மலையகத் தமிழர் காணி உரிமையற்றோராகவும்,குறைந்த வருமானம் பெறுவோராகவும் இருப்பதனால் அவர்கள் விருப்பமான முறையில் வீடுகளை அமைத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இதனால் அவர்களது வீடில்லாப் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைப்பது அவசியம்.
தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் குடிகள் ஆவர். இதனால் இதனை நிறைவேற்ற வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் மலையகத் தமிழர்க-ளுக்கு காணி உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. 1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணி அபிவிருத்திச் சட்டம் மலையகத் தமிழர்களுக்கு இவ்வுரிமையை வழங்க மறுத்தது. அதனைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சட்டசபையில் உரையாற்றினார். 1946 இல் கிராம விரிவாக்கத்திட்டத்தின் போது உருளவல்லி தோட்டத் தமிழ்த் தொழிலாளர்-கள் புறக்கணிக்கப்பட்டபோது, விரிவான வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலமாக அது முறியடிக்கப்பட்டது. களனி பள்ளத்தாக்கு பிரதேச இடதுசாரி-களின் தாக்கத்தால் இது சாத்தியமானது.
1972 இல் காணி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் நுவரெலியா பகுதியில் பெருந்தெருக்களை அண்டிய தோட்டக்காணிகளைப் பிரிக்க முற்பட்டபோது மக்களின் எதிர்ப்பினால் அச்செயல் முறி-யடிக்கப்பட்டது. அதன் பின்னர் டெல்டா, சங்குவாரி தோட்டங்களில் வன்செயல்கள் இடம்பெற்றன. தொழிலாளர்களின் துணிகர எதிர்ப்பால் அது முறியடிக்கப்பட்டது.
இக்கட்டத்தில் வீடுகளில் இருந்து பலாத்கா-ரமாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஹட்டன் பகுதியில் குடாஓயா தோட்டத்தில் பிரதேச மக்களின் ஒன்றிணைந்த எதிர்ப்பால் அவ்வாறான முயற்சி முறியடி-க்கப்பட்டது. 1994 இல் பெ. சந்திரசேகரன் அமைச்சராக இருந்தபோது முதன் முதலாக 7 பேர்ச் காணியோடு தனிவீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. 2015_19 காலகட்டத்தில் அன்றைய அரசாங்கத்தால் திகாம்பரம் தலைமையில் வீடுகள் அமைக்கப்பட்டன. தற்போது இந்திய உதவியால் வீடுகள் அமைக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட காணிகளுக்கும், வீடுகளுக்கும் உரிய சட்டபூர்வ உரித்துப் பத்திரம் கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று ஆமை வேகத்தில் நகரும் வீடமைப்பு துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டு
Reported by :S.Kumara