நாட்டில் தேசிய சக்தியை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பல கட்சிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று 5ஆம் திகதி ‘கிராமத்திலிருந்து ஆரம்பிப்போம்’ நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இந்த நாட்டு மக்கள் மற்றும் பல அரசாங்க, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய சக்தியொன்றைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே தேசிய சக்தியின் அபிலாஷையாகும். மேலும் இந்நாட்டு மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத போது,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
——————–
Reported by : Sisil.L