திருகோணமலை மகளிர் கல்லூரி ஒன்றில்  இன்று பெரும் குழப்ப நிலை

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள் -ஆசிரியர்கள் பெற்றோர் மத்தியில்  பூதாகரமாக மாறியுள்ளதாக அறிய வருகிறது.


இன்று முஸ்லிம் ஆசிரியை ஒருவர் மீள் நியமனத்தில் பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

 
இதை குறித்த ஆசிரியை காணொளிப் பதிவு செய்துள்ளதாகவும் அதைத் தடுக்க  அதிபர் தலையீடு செய்ததையடுத்து அதிபரை  குறித்த ஆசிரியை தள்ளி விட்டதாகவும்  இதையடுத்து கீழே விழுந்து மயக்கமடைந்த அதிபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


சம்பவம்  குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
———————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *