திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் உலகில் முதல் இடம்  பெற்ற அமெரிக்கா!

ஐரோப்பிய நுகர்வோருக்குத் தேவையான விநியோகத்தை வழங்குவதால், அமெரிக்கா உலகின் முன்னணி எல்என்ஜி(திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.


கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது.


இதன்போது ரஷ்யா ஏற்றுமதித் தடைகள் விதித்ததால், குறைந்தபட்சம் 71% திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துக்கு அமெரிக்க உற்பத்தி சென்றது.


இதனால் 2022ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் உலகின் மிகப்பெரிய திரவ-இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக அமெரிக்கா உயர்ந்துள்ளது.
—————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *