தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீள முடியும் -எஸ்.பி. திஸாநாயக்க

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியும் என பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.


கொவிட் 19 தொற்று நோயின் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொற்று நோய் முக்கிய பொருளாதாரங்களில் ஏற்படுத்திய தாக்கத்தினால், இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் தொற்றுநோயால் சுருங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2009 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆசியாவிலேயே சிறந்ததாக இருந்ததாகவும், கொழும்பு உலகிலேயே சிறந்த முறையில் பராமரிக்கப்படும் நகரங்களில் ஒன்றாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.


நாடு வங்குரோத்தின் விளிம்பில் இல்லை என்றும், பொருளாதாரம் மீள எழுச்சி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர்களை பராமரிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் வினவியபோது, மக்கள் பிரதிநிதிகளுக்கும் செலவுகள் இருப்பதாகவும், அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாகனம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


அரசியல்வாதிகளை விமர்சிப்பதை விடுத்து ஊடகங்கள் ஏனைய விடயங்களையும் அவதானித்து செய்திகளை வெளியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
———————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *