கொவிட்-19 வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 4000 முதல் 4500 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர் கொலம்பகே மேலும் கூறுகையில்,
“கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை தினமும் 50க்கும் அதிகமாக இருப்பதால் இவ்வாறான நிலைமையை எதிர்பார்க்கலாம்” என்றார்.
“இதற்கு முன் ஒருபோதும் இந்நாட்டில் போரின் போது கூட அதிகளவு மக்கள் இறந்ததில்லை. எனவே இது மிகவும் அபாயகரமான சந்தர்ப்பம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றுகளில் சுமார் 50 வீதமானவை ஒட்சிசன் தேவைப்பாடுள்ளவை” என அவர் மேலும் கூறினார்.
—————————–
Reported by : Sisil.L