ரஷ்யாவின் டாடர்ஸ்தான் குடியரசுப் பகுதியில் பாரசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகிறது.
விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்துக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
———
Reported by : Sisil.L