தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்துக் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் இன்றைய நிலவரப்படி கணிசமாகக் குறைந்துள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக வணிகர்கள் பொருளாதார மையத்துக்குச் செல்லாததே விலை வீழ்ச்சி மற்றும் மொத்த விற்பனை இன்மைக்குக் காரணம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ போஞ்சி இன்று ரூ.100 ஆக குறைந்துள்ள நிலையில் கரட் ரூ.110 ஆகவும், தக்காளி ரூ.60 ஆகவும், பீட்ரூட் ரூ.100 ஆகவும், லீக்ஸ் ரூ.80 ஆகவும் விலை குறைந்துள்ளன.
Reported by : Sisil.L