தபால்மூல வாக்கு முடிவுகள் பிரகாரம் 10 மாவட்டங்களில் அனுர முன்னிலை

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்கு முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் அனுர குமார திசாநாயக்க முன்னிலைப் பெற்றுள்ளார். இன்று(22) அதிகாலை 3 மணி வரை வௌியான 11 மாவட்டங்களில் அனுர குமார திசாநாயக்க 10 மாவட்டங்களில் முன்னிலை அடைந்திருந்தார். வன்னி மாவட்டத்தில் மாத்திரம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாச முன்னிலைப் பெற்றார்.

ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது வாக்கு முடிவு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வௌியானது. இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க முன்னிலைப் பெற்றுள்ளார். அனுர குமார திசாநாயக்க 19,185 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 6641 வாக்குகளையும் 
சஜித் பிரேமதாச 4675 பெற்றுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்தின் தபால்மூல வாக்கு முடிவிலும் அனுர குமார திசாநாயக்கவிற்கே வெற்றி கிட்டியுள்ளது. 11,768 வாக்குகளைப் பெற்று முன்னிலை அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 4120 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 2762 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஸ 188 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தபால்மூல வாக்கு முடிவுகள் பிரகாரம் அனுர குமார திசாநாயக்கவே வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக  14,482 வாக்குகள் கிடைத்துள்ளன. சஜித் பிரேமதாச 3397 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 2502 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஸ 819 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தின் தபால்மூல வாக்கு முடிவுகளில் சஜித் பிரேமதாச 4899 வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 4257 வாக்குகளைப் பெற்றுள்ளார். 2092 வாக்குகளைப் பெற்று அனுர குமார திசாநாயக்க மூன்றாமிடத்தை அடைந்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்கவிற்கு ஆதரவாக 14,050 வாக்குகள் கிடைத்துள்ளன. சஜித் பிரேதாசவிற்கு 5733 வாக்குகளும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 3401 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க 25,892 வாக்குகளை கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க 7226 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 5338 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க 5480 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 4537 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 3630 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவின் பிரகாரம் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து 12,186 பேர் வாக்களித்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை 4243 பேரும் சஜித் பிரேமதாசவை 3816 பேரும் ஆதரித்துள்ளனர். நாமல் ராஜபக்ஸவிற்கு ஆதரவாக 372 வாக்குகள் கிடைத்துள்ளன.

கொழும்பு மாவட்ட தபால்மூல வாக்கு முடிவில் 20,864 வாக்குகளைப் பெற்று அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு 7645 வாக்குகளும் சஜித் பிரேமதாசவிற்கு 4080 வாக்குகளும் நாமல் ராஜபக்ஸவிற்கு 561 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்ட தபால்மூல வாக்கு முடிவில் அனுர குமார திசாநாயக்க 19,712 வாக்குகளுடன் முதலிடத்தை தனதாக்கியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு 5088 வாக்குகளும் சஜித் பிரேமதாசவிற்கு 4041 வாக்குகளும் நாமல் ராஜபக்ஸவிற்கு 543 வாக்குகளும் கிடைத்துள்ளன.

நுவரெலியா மாவட்ட தபால்மூல வாக்கு முடிவிற்கு அமைவாக அனுர குமார திசாநாயக்க 8946 வாக்குகளை கைப்பற்றியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க 5087 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 4334 வாக்குகளையும் நாமல் ராஜபக்ஸ 308 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *