2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி நிதியத்தினால் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்துவது நிறுத்தப்பட்ட போதிலும் மீண்டும் உதவித் தொகை வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு சில விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவித்தொகை செலுத்தப்பட்டது, அதன் பின் பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது.
இதன்படி, மீண்டும் உதவித் தொகைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதய சத்திரசிகிச்சை, சிறுநீரக மாற்று, கல்லீரல் மாற்று சிகிச்சை போன்ற தீவிர நோய்களுக்கான சத்திர சிகிச்சைகளுக்காக செலவிடப்படும் பணத்தின் ஒரு பகுதியை ஜனாதிபதி நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
——————-
Reported by :Maria.S