சோளம் தட்டுப்பாடு காரணமாக கால்நடைகளுக்கு தீவனமாக சோள மரங்கள்!

மக்காச்சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், மக்காச்சோள மரங்கள் பெரும்பாலும் கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுவதாக தேசிய கால்நடை சபை கூறுகிறது. மக்காச்சோள அறுவடை குறைவடைந் துள்ளதால், சோள மரங்களைக் கொள்வனவு செய்வதற்கு கால்நடை சபை நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள மகாகமகே தெரிவித்துள்ளார்.


 தேசிய கால்நடை சபை சோள மரங்களை கிலோ ரூ.8 முதல் 12 வரை விலை கொடுத்து கொள்வனவு செய்கிறது.

 
கால்நடை தீவனத்துக்காக வருடத்துக்கு 7000 மெற்றிக் தொன் சோளம் தேவைப்பட்ட போதிலும் 1500 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் டொலர் பிரச்சினை காரணமாக சோள விதைகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கால்நடை தீவனப் பிரச்சனையால் பால் உற்பத்தியும் 5 முதல் 10 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு (2023) இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
எருமைகள் மற்றும் பூர்வீக இனங்கள் எந்தவொரு கடினமான சூழலுக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கப் படுவதால், எருமைகளிலிருந்து பெறப்படும் பாலின் அளவு  2020 ஐ விட 2021 இல் அதிகரிக்கும் என்று பேராசிரியர் கூறுகிறார்.


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பசுக்களுக்கு சரியான உணவு வழங்கப்படாததால், கால்நடைகள் பலவீனமடைந்து பால் உற்பத்தி குறைகிறது என்றும் அவர் கூறினார்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *