சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்றம் கூறியுள்ளது.

சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பேர் தமது சொத்து விபரங்களை சபாநாயகர் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும் இதனை பின்பற்றாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் தத்தமது சொத்து விபரங்களை ஜனாதிபதியிடமே சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Reported by :S.Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *