சுகாதார பணியாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று கொழும்பு நகர மண்டபத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டக் காரர்கள் குழுவொன்று வலுக்கட்டாயமாக சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்தனர்.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் அமைச்சின் வளாகத்துக்குள் வந்து தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார சங்கங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
—————–
Reported by : Sisil.L