சீனாவைச் சேர்ந்த பிரபல டி.வி. பெண் தொகுப்பாளர் ஹூவாங் வெய். இவர் நேரலை ராணி என்று அழைக்கப்படுகிறார். இவரை சமூக வலைத்தளத்தில் 1.10 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.
இவர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பொழுதுபோக்குத் துறையில் வரி ஏய்ப்பு, தவறான தகவல்களைக் கொடுத்து அவர் தனது வருமானத்தை மறைத்து வரி செலுத்தாமல் இருந்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில் வரி ஏய்ப்பு குற்றத்துக்காக ஹூவாங் வெய்யுக்கு 204 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது.
இது குறித்து ஹூவாங் வெய் கூறும்போது, ‘‘என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வரிச்சட்டம் மற்றும் ஒழுங்குமுறையை நான் மீறி இருப்பதை உணர்ந்தேன். இதற்காக மிகவும் வருத்தமடைந்தேன். பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருமான வரித்துறை விதித்துள்ள தண்டனையை (அபராதம்) நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்’’ என்றார்.
—————–
Reported by : Sisil.L