சீனாவின் 500 மில்லியன் RMB மானியத்தின் கீழ் ஆறு தொகுதி அரிசி இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஜூன் 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.
சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், ‘பாடசாலை உணவுத் திட்டத்தின்’ கீழ் இலங்கை முழுவதும் உள்ள மிகவும் தேவைப்பாடுள்ள குழந்தைகளுக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
—————————–
Reported by:Anthonippillai.R