சிறுமி ஹிஷாலினிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிறுமி ஹிஷாலினியின்  மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (27) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டக்காரர்கள், “சிறுமியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிரான தடைச் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *