முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட நால் வரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஒருவர் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ரிஷாத்தின் மனைவி, மனைவின் தந்தை, மைத்துனர், தரகர் ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்க மறியலில் தடுத்து வைத்து விசாரிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வா இன்றைய தினம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்களை மேலும் விசாரிக்கக் காலம் தேவை என பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L