கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள மையால், விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவாகும்.
முட்டை ஒன்றின் விலை 47 ரூபா 50 சதத்துக்கு இன்றிலிருந்து விற்கப்படும் என்றும் அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
Reported by:Anthonippillai.R