முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என வடக்கு, கிழக்கு யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் இனப் படுகொலைக்கு காரணமான முன்னாள் ஜனாதிபதியையும் அதற்கு ஆதரவளித்த மக்களையும் போர்க்குற்ற நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அதன் தலைவி திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மகஜர் ஒன்றைக் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வவுனியாவில் தெரிவித்துள்ளார்.
——-
Reported by :Maria.S