கொவிட்-19 தடுப்பூசிகளின் 2ஆவது டோஸ் 311,102 பேருக்கு நேற்று(09) வழங்கப்பட்டது. இதுவரை ஒரு நாளில் வழங்கப்பட்ட 2ஆவது டோஸின் அதிக எண்ணிக்கை இதுவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
மொத்தமாக நேற்று 490,805 டோஸ் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் சனத்தொகையில் 15 வீத மக்கள் அல்லது 3,249,670 பேர் கொவிட்-19க்கு எதிராக முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என தொற்றுநோயியல் பிரிவின் தரவு கூறுகிறது.
இதேவேளை நாட்டில் 1ஆவது டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 11 மில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
———————
Reported by : Sisil.L

