கொவிட் தடுப்பூசி பெற்ற 49 பேர் கொவிட் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இரண்டு டோஸ்களையும் பெற்ற 9 பேரும் ஒரு டோஸ் பெற்ற 40 பேரும் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் இரு டோஸ்களைப் பெற்ற பின் இறந்த 9 பேருக்கு வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது. முக்கிய காரணம் நீரிழிவாகும். இது தொற்றல்லாத நோயாகும்.கொவிட் இறப்புகளின் பரிசோதனையில் 3524 பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பது தெரியவந்தது. இது 70 வீதமான கொவிட் இறப்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இறப்புகளைத் தடுக்க ஆரம்ப கால தடுப்பூசி ஒன்றே தீர்வு என அவர் வலியுறுத்தினார்.
————————–
Reported by : Sisil.L