கொவிட் தொற்று நோயால் நாட்டில் பிறப்பு எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது என பாரம்பரிய மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றால் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக திருமணங்கள் நடத்தப்படாததே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 350,000 குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் திருமணங்கள் இல்லாததால் ஓர் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
கொவிட் காரணமாக இதுவரை நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3500ஆகும். ஆனால் புதிய பிறப்புகளால் இதை சமப்படுத்தியிருக்க முடியும்” என அவர் மேலும் கூறினார்.
Reported by : Sisil.L