யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளி ஒருவர் நேற்று மரணமானார். இதையடுத்து, வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் – கனகரத்தினம் வீதியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்
தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
——————–
Reported by : Sisil.L