கொவிட் -19 தொற்று நோய் நெருக்கடியை அடுத்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளதுடன், வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டதை அடுத்தே நேற்று அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது.இது குறித்து கராப்பிட்டிய வைத்தியசாலை பதில் பணிப்பாளரால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பால் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையும் நேற்று முன்தினம் அவசர நிலையை அறிவித்தது.
அவசர நிலையை அறிவித்துள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் விடுதிகள் நிரம்பியுள்ளதால் அங்கு மேலதிக படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை, தற்போது, நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் உள்ள கொவிட் சிகிச்சை மையங்கள் 90 வீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன.
மேல் மாகாணத்தில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் 100 வீதம் நோயாளிகளால் நிரம்பியுள்ளன. பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகளவில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருவதால் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் படுக்கைத் திறனுக்கும் இரு மடங்கு அதிகமான சிறுவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்
ளனரெனத் தெரியவருகிறது.
—————
Reported by : Sisil.L