கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி ‘கெஹலிய கோ விலேஜ்’ என்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இம்யூனோகுளோபுலின் மருந்து தொடர்பான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, குறித்த மருந்து தொடர்பான வழக்கு தொடர்பில் இரண்டாவது தடவையாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சருக்கு விசாரணை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
எனினும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று மற்றுமொரு வழக்குக்காக கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வேறு திகதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Reported by:S.Kumara