குரங்கம்மை  நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர்

  நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக நடுவமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும்.

 
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை நியூயோர்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது.
அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை என்றும், இருந்திருந்தால் நோய்ப்பரவல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஏமாற்றமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.  
கொவிட்-19 நோய்ப்பரவல், தொடக்கத்தில் கையாளப்பட்ட விதத்தைப் போலவே குரங்கம்மையின் நிலையும் இருக்கிறது என்பது பொதுமக்களின் ஆதங்கம்.


ஆனால் குரங்கம்மைக்கான தடுப்பு மருந்து அரசாங்கத்தின் கைவசம் உள்ளது.ஆயினும் அது போதுமான அளவில் இல்லை என்று சிலர் சினமடைந்துள்ளனர்.


நியூயோர்க் நகரைப் பொறுத்தவரை 1 மில்லியன் முறை போடுவதற்குத் தேவையான தடுப்புமருந்தில் ஒரு சிறிய பகுதிதான் அதற்குக் கிடைத்துள்ளது.

 
அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாவதாகக் கூறப்பட்டது.
—————-
REported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *