கிளிநொச்சியில் 2 பேர் கொரோனாவால் பலி!

கிளிநொச்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உயிரிழந்த 75 வயதுடைய அழகம்மா என்ற பெண் மற்றும் 47 வயதுடைய விஜயகுமார் ஆகிய இருவரின் மாதிரிகள் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றின் முடிவுகள் நேற்று வெளியாகின.

அவற்றின் அடிப்படையில், நேற்று முன் தினம் வீதியில் விழுந்து உயிரிழந்த கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை ஊழியரான விஜயகுமார் கொரோனா தொற்றின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மிகத் தீவிரம் பெற்றுள்ள கொரோனா அபாயம் குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *