கிளிநொச்சி வைத்தியசாலையில் புகுந்து வாள்வெட்டு அட்டகாசம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்துக்குள் புகுந்த நபர் அங்கிருந்த நோயாளியை வெட்டியதுடன் வெளியில் வந்து மேலும் மூவரையும் வெட்டிச் சென்றுள்ளார்.


நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஏற்கனவே வாள்வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையின் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவரே வெளியில் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் இருவருடன் வந்து நோயாளியை தேடிச்சென்று சத்திரசிகிச்சை கூடத்துக்குள்  இருந்தவரை வெட்டியுள்ளார். பின் வெளியில் வந்து வேறு மூவரையும் வெட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.

 
முன்பகை காரணமாக இச்செயல் அரங்கேறியிருக்கலாம் எனவும் இச்சம்பவத்தால் வைத்தியசாலை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *