60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசியை கட்டாயமாக்க கிரீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொவிட் தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு மாதம் 100 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிதி கிரேக்க சுகாதார அமைப்பின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.
கிரீஸ் மக்கள் தொகையில் சுமார் 63 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்ட 520,000 பேருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
அதன்படி, இதுவரை முதல் தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 16ஆம் திகதிக்குள் தடுப்பூசி போட பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
————
Reported by : Sisil.L