கியூபெக்கில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் தொடர்பில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை

கியூபெக் பிராந்தியத்தில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அம்பர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.சிறுவன் விவகாரத்தில் இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் நியூ பிரன்சுவிக் பிராந்தியத்திலும் தேடுதல் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பில் கியூபெக் மாகாண பொலிஸார் வெளியிட்ட தகவலில், சிறுவன் Jake Côté ஓகஸ்ட் 31ஆம் திகதியிலிருந்தே மாயமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து புதன்கிழமை தொடக்கம் கியூபெக் மாகாணத்தில் பரவலாக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தவிர, வடமேற்கு நியூ பிரன்சுவிக்கின் Madawaska, Restigouche மற்றும் Gloucester ஆகிய பகுதிகளில் உள்ள குடிமக்களிடம் சிறுவன் தொடர்பிலும் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
பழுப்பு நிற தலைமுடியுடன், 14 கிலோ உடல் எடை கொண்ட சிறுவன் Jake Côté தமது தந்தை David Côté என்பவரால் கடத்தப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும், பொதுமக்களும் வாகனச் சாரதிகளும் சிறுவன் மற்றும் David Côté தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 David Côté ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அவரைப் பார்க்கும் எவரும் அவரை நெருங்க முயற்சிக்கக் கூடாது என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *