காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்துக்கு 21 நாட்கள் நிறைவு


காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் இன்று 21ஆவது நாளாக இடம்பெறுகிறது.


ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று இரவும் தொடர்ந்தது.
———–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *