இந்த நாட்களில் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மட்டம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர் மின் உற்பத்திக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் சுமார் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்கின்றன.
காசல்ரீ நீர்த்தேக்க அணை 155 அடி உயரம் கொண்டதுடன் அதன் நீர் மட்டம் 118 அடியாகக் குறைந்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி காலை 6 மணியளவில் மவுசாக்கலை நீர்த்தேக்க அணையின் உயரம் 120 அடியாக இருப்பதுடன் நீர்மட்டம் 75 (15)அடியாகக் குறைந்துள்ளதாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
—————–
Reported by : Sisil.L