கம்பஹாவில் 200க்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.நாட்டில் நேற்று 1270 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 269,946ஆக அதிகரித்துள்ளது.இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 229பேரும் களுத்துறையில் 180 பேரும் கொழும்பில் 137 பேரும் கண்டி மற்றும் மொனராகலையில் தலா 92 பேரும் காலியில் 76பேரும் குருநாகலில் 49 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் தலா 46 பேரும் மாத்தறையில் 43 பேரும் பதுளையில் 34 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மேலும் அம்பாந்தோட்டையில் 28 பேரும் மட்டக்களப்பில் 22 பேரும் அனுராதபுரதம் மற்றும் பொலன்நறுவையில் தலா 21 பேரும் திருகோணமலை மற்றும் மாத்தளையில் தலா 20பேரும் கேகாலையில் 16 பேரும் நுவரெலியாவில் 14 பேரும் மன்னாரில் 12 பேரும் முல்லைத்தீவில் 8 பேரும் இரத்தினபுரியில் 7 பேரும் வவுனியாவில் 6 பேரும் புத்தளத்தில் 3 பேரும் கிளிநொச்சியில் ஒருவருமாக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 47 பேரும் நேற்று கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
—————–
Reported by : Sisil.L