மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய அழைப்பாணையின் பிரகாரம் அவர் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமையே இதற்குக் காரணம்.
அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை மே 02 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய காலத்தில் தனது நெருங்கிய சகாக்களுக்கு திறைசேரி உண்டியல்களை விற்பனை செய்து அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டிருந்தார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் 6 குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்வைத்த தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவினால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை பரிசீலித்த மேலதிக நீதவான், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L