கனடிய தேர்தல் : ட்ரூடோ தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடிக்கும் அதேவேளை மீண்டும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளார்

கனடாவில் இடம்பெற்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ள போதிலும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.
பெரும்பான்மையைப் பெறுவதற்கு 170 ஆசனங்கள் அவசியம் என்ற நிலையில் லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்கள் கிடைக்கலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 122 ஆசனங்கள் கிடைக்கக்கூடும் என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இன்னமும் பல வாக்குகளை எண்ண வேண்டியுள்ளது ஆனால் இன்றிரவு மில்லியன் கணக்காண கனடா மக்கள் முற்போக்கான திட்டமொன்றை தெரிவு செய்துள்ளனர் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


உங்களிற்காக போராடும் உங்களுக்கானவற்றை செய்யும் அரசாங்கத்தை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் நான்காவது கொரோனா அலைக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தத் தேர்தலே கனடாவின் வரலாற்றில் மிகவும் செலவுமிக்க( 470 மில்லியன் அமெரிக்க டொலர்) தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் இந்த முறையும் தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் முடிவுகள் போல காணப்படும் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.


பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு பெரும்பான்மையைப்  பெற்றுக் கொள்வதற்காகவே உரிய காலத்திற்கு முன்னர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் என்ற கருத்து காணப்படுகின்றது – தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தினர் என்பதற்கான சரியான காரணங்களை அவர் இன்னமும் வெளியிடவில்லை.


கென்சவேர்ட்டிவ் தலைவர் எரின் ஓடுல் இந்தத் தேர்தலை நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நடவடிக்கை என வர்ணித்துள்ளார்.
600 மில்லியன் செலவில் நாட்டில் ஆழமான  பிளவுகளின் மத்தியில் கனடா மக்கள் ட்ரூடோவிற்கு இன்னுமொரு சிறுபான்மை அரசாங்கத்தை வழங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *