கனடாவில் வெள்ளை வால் இன மான்களில் கொரோனாதொற்று

கனடாவில் முதல்முறையாக வெள்ளை வால் மான் இனத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கனடாவில் மூன்று வெள்ளை வால் மான்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 29ஆம் திகதி குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் நவம்பர் 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், மான்கள் மிகச் சாதாரணமாகவே காணப்பட்டதாகவும் கூறுகின்றனர்.


கனடாவை பொறுத்தவரை, வனவிலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறிவது இதுவே முதன்முறையாகும்.
கொரோனா வைரஸ் தொற்றானது பண்ணைகளில் வளர்க்கப்படும் மிங்க், பூனைகள், நாய்கள், கிளிகள் மற்றும் புலிகள், சிங்கங்கள், கொரில்லாக்கள், நீர் நாய்கள் மற்றும் பிற மிருகக் காட்சிச்சாலை விலங்குகள் உட்பட பல விலங்கினங்களில் உலகளவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *