கனடாவின் உச்ச நீதிமன்றத்துக்கு ஒன்ராறியோ நீதிபதி மிச்செல் ஓ’போன்சாவின் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமனம் செய்துள்ளார்.
கனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் பூர்வகுடியினரான இவர், நாட்டின் நீதி அமைப்பின் மிக உயர்ந்த மட்டத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக கொண்டாடப்படுகிறார்.
2017 முதல் ஒன்ராறியோவின் ஒட்டாவாவிலுள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வருகிறார் ஓ’போன்சாவின். ஒன்ராறியோவின் ஹான்மர் பகுதியில் பிறந்த இவர் Odanak பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக தெரிவான முதல் பூர்வகுடிப் பெண் என்ற வரலாற்றைப் படைக்கும் முன்பு, ஓ’போன்சாவின் றோயல் ஒட்டாவாவின் பொது ஆலோசகராக செயற்பட்டு வந்தார்.
மேலும் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பூர்வகுடி சட்டங்கள் தொடர்பில் பாடம் நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
—————————-
Repored by:Maria.S