கனடாவில் பாதசாரிகளை மோதிய வாகனம்: மருத்துவமனையில் சிலர் கவலைக்கிடம்

ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.


லண்டனிலுள்ள Riverside Drive என்ற பகுதியில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீதும் பல கார்கள் மீதும் மோதியதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.


நேற்று மாலை 6.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி வாகனத்திலேயே இருந்ததாகவும், இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *