கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகளின் வியப்பூட்டும் செயல்

கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதி வருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர்.


கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையைச் செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர்.

 
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் பிராம்ப்டன் பகுதியில்  இலங்கை வம்சாவளி தமிழர்களான சுரபி மற்றும் ஸ்வாதி அன்பழகன் வசிக்கின்றனர்.


19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர் காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள். எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் ஆர்வத்தை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.


பிராம்ப்டனில் கொவிட் தொற்று கடுமையாகத் தாக்கியபோது கடந்த கோடை மாதங்களில் ஒரு தடுப்பூசி கிளினிக்கில் தன்னார்வலர்களான இருவரும் பணியாற்றியுள்ளனர். அப்போது தான் அவர்களின் முதல் புத்தகத்துக்கான சிந்தனை உதித்தது. கிளினிக்கில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களைப் பார்த்தபோது, தடுப்பூசி போடுவது பற்றி குழந்தைகளுக்கான புத்தகத்தை உருவாக்க நினைத்தார்கள்.


இது குறித்து பேசிய சுரபி, “பள்ளிக்குச் செல்ல முடியாததால் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறு கடுமையாக மாறியது என்பதைப் பார்ப்பது அல்லது நிலைமையைப் புரிந்து கொள்வதுதான் சமூகத்துக்குத் திரும்பக் கொடுக்க எங்களுக்கு உத்வேகம் அளித்தது” என்று கூறினார்.


அவர்கள் எழுதும் குழந்தைகள் புத்தகங்களின் தொடருக்கு Twin Tales எனப் பெயரிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் முதல் புத்தகமாக Ahana Got A Vaccine என்ற புத்தகத்தை எழுதினர். தொடர்ந்து, Mom, Dad! Please Get The Vaccine!, I am Beautiful மற்றும் The Race For Change ஆகிய நான்கு புத்தகங்களை எழுதியுள்ளனர். ஐந்தாவதாக இப்போது, தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய புத்தகம் எழுதி வருகின்றனர்.

 


Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *