கனடாவில் 87ஆவது வயதில் முதுமாணி பட்டம் பெற்ற இலங்கைப் பெண்மணி

இலங்கையில் பிறந்த வரதலெட்சுமி தனது 87 வயதில் கனடாவில் முதுமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
 யாழ்.வேலணையில் பிறந்தவர் வரதலெட்சுமி சண்முகநாதன்.


வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன் பட்டம் பெற்ற 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களில்  ஒருவராவார்.


4 கண்டங்களில் கற்பித்தவரான ஆசிரியை வரதலெட்சுமி தனது முதலாவது முதுமாணி பட்டத்தை லண்டனின் பிரிக்பேக் கல்லூரியில் பூர்த்தி செய்திருந்தார்.


தற்போது கனடிய  பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாவது முதுமாணிப் பட்டம் பெற்ற மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *