கனடாவின் அரசியலுக்கு அதிகளவு பெண்கள்தேவை அனிதா ஆனந்த்

கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற  உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.


இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக நேற்று ஒட்டாவாவில் நடத்தியது. Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்.
இந்த நிகழ்வில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான அனிதா ஆனந்த் கலந்துகொண்டார். அது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:

 
கனடா அரசியலுக்கு அதிகளவிலான பெண்கள் மற்றும் பன்முகத் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். 2001 முதல் EqualVoice CA நாடு முழுவதும் உள்ள நமது நாடாளுமன்றம், மாகாண மற்றும் பிராந்திய சட்டமன்றங்கள் மற்றும் நகர அரங்குகளில் சமமான பிரதிநிதித்துவத்துக்காக வாதிடவும், செயற்படுத்தவும் கடுமையாக உழைத்து வருகிறது எனப் பதிவிட்டுள்ளார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *