குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன் எச்சரிக்கை அடிப்படையில் இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளில் நோய்த் தொற்று அபாயம் காணப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் பட்டியலிடப்படவில்லை.
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குரங்கம்மை தாக்கம் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு அவை குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் 90 குரங்கம்மை நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளதுடன், ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களிலும் குரங்கம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
படுக்கை விரிப்புகள், டவல்கள், தும்மல், இறுமல், பாலியல் தொடர்பு போன்றவற்றின் ஊடாக குரங்கம்மை நோய் பரவும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
————
Reported by:Anthonippillai.R