கனடா மீதான தடையை  நீக்கியது  சீனா

கனடா மீதான நீண்ட கால தடையை சீன அரசு நீக்கியது. Huawei CEO மெங் வான்சூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கனோலா விதைகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.


 சீனா மூன்று வருட தடைக்குப் பிறகு தடையை தளர்த்தியது. கனடாவின் விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau மற்றும் வர்த்தக அமைச்சர் Mary Ng ஆகியோர் தடையை நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.


கனோலா விதைகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை சீனா நீக்கியதை கனேடிய அரசாங்கம் பாராட்டியது.
கனடா அனைத்து சந்தர்ப்பங்களிலும் சர்வதேச வர்த்தக தரத்தை பின்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த கனோலா விதைகளைக் கொண்டு பன்றிக்கொழுப்பு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Reported By: Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *