கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு 83ஆவது இடம்

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தயாரித்த அண்மைய கடவுச்சீட்டு தரவரிசையின்படி, ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது.


இந்தத் தரவரிசையில் இலங்கைக்கு 83ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், இலங்கை கடவுச்சீட்டுடன் வீசா பெறாமல் 12 நாடுகளுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பும், விசா ஒன் அரைவல்(On Arrival) வசதியின் கீழ் 37 நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.


இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 147 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே விசாவைப் பெற வேண்டும்.


கடவுச்சீட்டு சுட்டெண் இணையத்தளத்தின் படி, இலங்கை கடவுச்சீட்டுடன் முன் வீசா பெறாமல் நுழையக்கூடிய நாடுகள் பின்வருமாறு:


  1. பஹாமாஸ்
    2. பார்படோஸ்
    3. டொமினிகா
    4. காம்பியா
    5. கிரெனடா
    6. ஹெய்ட்டி
    7. லெசோதோ
    8. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
    9. சிங்கப்பூர்
    10. செயின்ட். வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
    11. தஜிகிஸ்தான்
    12. வெனிசுவெலா


இதேவேளை, கடவுச்சீட்டு தரவரிசையை நடத்தும் மற்றொரு நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள The Henley Passport Index: Q2 2022 Global Ranking இன் படி, இலங்கை 103ஆவது இடத்தில் உள்ளது.


இன்று, உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) கடவுச்சீட்டு என்று கருதப்படுகிறது. இது அதனை வைத்திருப்பவர் விசா இல்லாமல் 115 நாடுகளில் நுழைய அனுமதிக்கிறது.
——————
Reported by

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *