ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் விசித்திர இளைஞர்!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தைசுகே ஹோரி (36) எனும் இளைஞர் ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே உறங்கி வருகிறார்.  இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே இவர் தூங்குகிறாராம். இதனால் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதாக ஹோரி கூறுகிறார். மேலும், தூங்கும் நேரத்தை எப்படிக் குறைப்பது என்பது  குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகிறாராம்.

 
இது தொடர்பாக, தைசுகே ஹோரி கூறியதாவது:
எல்லாரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தைக் குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாட்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *