ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.


போர்ட் , மறைந்த தனது தாயாரின் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும், தற்போது வசிக்கும் வீட்டை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தனது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் எனவும் அவர்கள் திருமண வயதை அடைந்து விட்டதாகவும் போர்ட்  (Doug Ford) தெரிவித்துள்ளார்.


இதனால் தனது தாயாரின் இல்லத்துக்குச் செல்ல தீர்மானித்ததாக  அவர் தெரிவித்துள்ளார். டக் போர்டின் வீடு சகல வசதிகளையும் கொண்டமைந்த அதி சொகுசு இல்லம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த வீடு சுமார் 4500 சதுர அடியைக் கொண்டமைந்தது எனவும், 3.2 மில்லியன் டொலர் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
————
Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *